பிறந்த நாள் வாழ்த்து கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா மயிலாடுதுறை மாவட்டம்.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என் செல்லமே.. __________________________ அன்புள்ள மகனுக்கு அப்பாவின் கடிதம்! __________________________ இன்பா என்கிற இனியவனே -என் குரும்புக்கார முதல் மகனே.. சிறப்பாய் வாழ்ந்துநீ சிகரம் தொட -என் சீர்மிகுத் தமிழால் வாழ்த்துகிறேன்.. மழலைக் குரலில் செந்தமிழை-என் மனதில் ஊற்றும் நேரமதில் வறுமை மறந்து ரசிக்கின்றேன்!-என் வலியை மறந்து சிரிக்கின்றேன்! வானம் பார்த்து நடவாதே!- தன் மானம் காத்து நடந்துவிடு! சுயநலம் தன்னை போற்றாதே!-உன் சுற்றம் காத்து வாழ்ந்துவிடு! அன்பில் மட்டும் வளைந்து கொடு! -உனை அடைக்கிட முனைந்தால் வாளை எடு! கல்வி கலைகளில் தேர்ந்துவிடு!- என் கனவை நிறைவேற்றி வாழ்ந்துவிடு! நல்லவை அல்லவை அறிந்துவிடு! -அதில் நல்லதை மட்டும் பழகிவிடு! நண்பன் தீயவன் என்றறிந்தால்- உன் நல்லதில் சிலவற்றை பழக்கி விடு! எட்டுத் திசையும் எதிரிகளா-உன் சிரசைச் சிறிதும் சாய்க்காதே! வீரத் தமிழன் விளைபொருள் நீ!-இதை கடைசிவரை நீ மறக்காதே! பேதம் பார்த்தல் பெருங்குற்றம்-அதை சினத்தில் கூடச் செய்யாதே! இலச்சியம் நோக்கி ஓடிடு நீ!-சிறு இடர்கண்டு இடையில் நிறுத்தாதே! அறிவைப் ப...