உயிரில் இனிக்கும் அமுதமே | கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

பருக பருக 
பசியைத்தூண்டி
உயிரில் இனிக்கும் அமுதமே..!!

இறுக இறுகத் 
தழுவி யெந்தன்
நினைவில் சுற்றும் கிரகமே..!

உருக உருக 
தேனில் காதல்
கூடுகட்டிப் பார்க்கிறேன்..

வருக வருக 
என்றுநிதம்
உன்னை மட்டும் கேட்கிறேன்..!!

இதழ்கள் வேண்டாம் 
ருசிக்க உன்  
இனிய குரலில் பேசு..!

இதயச் சூட்டைத் 
தணிக்க காதல் 
கடலிலென்னை வீசு...!

தேகம்தேடும் 
காதலென்னில் 
தேடிப்பார்த்தால் தோற்பாய்..

தேன் நிலவே 
எந்தன் காதல்
ஊரில் எங்கு பார்ப்பாய்?

ச.இதயராஜா 
மேலப்பெரும்பள்ளம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திரம் | கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

என்ன பயன் | கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்

யாரடி நீ | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்