இடுகைகள்

பிறந்த நாள் வாழ்த்து கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா மயிலாடுதுறை மாவட்டம்.

படம்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என் செல்லமே.. __________________________ அன்புள்ள மகனுக்கு அப்பாவின் கடிதம்! __________________________ இன்பா என்கிற இனியவனே -என் குரும்புக்கார முதல் மகனே.. சிறப்பாய் வாழ்ந்துநீ சிகரம் தொட -என் சீர்மிகுத் தமிழால் வாழ்த்துகிறேன்.. மழலைக் குரலில் செந்தமிழை-என் மனதில் ஊற்றும் நேரமதில் வறுமை மறந்து ரசிக்கின்றேன்!-என் வலியை மறந்து சிரிக்கின்றேன்! வானம் பார்த்து நடவாதே!- தன் மானம் காத்து நடந்துவிடு! சுயநலம் தன்னை போற்றாதே!-உன் சுற்றம் காத்து வாழ்ந்துவிடு! அன்பில் மட்டும் வளைந்து கொடு! -உனை அடைக்கிட முனைந்தால் வாளை எடு! கல்வி கலைகளில் தேர்ந்துவிடு!- என் கனவை நிறைவேற்றி வாழ்ந்துவிடு! நல்லவை அல்லவை அறிந்துவிடு! -அதில் நல்லதை மட்டும் பழகிவிடு! நண்பன் தீயவன் என்றறிந்தால்- உன் நல்லதில் சிலவற்றை பழக்கி விடு! எட்டுத் திசையும் எதிரிகளா-உன்  சிரசைச் சிறிதும் சாய்க்காதே! வீரத் தமிழன் விளைபொருள் நீ!-இதை கடைசிவரை நீ மறக்காதே! பேதம் பார்த்தல் பெருங்குற்றம்-அதை சினத்தில் கூடச் செய்யாதே! இலச்சியம் நோக்கி ஓடிடு நீ!-சிறு இடர்கண்டு இடையில் நிறுத்தாதே! அறிவைப் ப...

வரம் | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா

வரம் • நெடுநாளாய்  தவம் இருக்கிறேன்..  காதலை  வரமாகத் தருவாய் என்று.. நீயோ   கண்ணீரை வரம் தருகிறாய்..  இனியவளே.. உன் பார்வை பட்டுத்தானே கல்லாய் கிடந்த நான்  கவிஞன் ஆனேன்..? உன் நினைவுகளை கொட்டித்தானே என் சிந்தனைப் பாணையில் கவிதை சமைத்தேன்.. ? நான் இனிக்க இனிக்க  கவிதைகள் படைக்க  என் கற்பனை ஊற்றில் விழுந்த கொம்புத் தேனே நீதானே காரணம்?   கொம்புத்தேன் நீ இல்லாவிடில் நான்  கொம்பன் இல்லை கவிதையில்.. கவிக்கொம்பன் என்ற  பெயருக்கு பின்னால் வரும்  என் உண்மைப் பெயரை  சொல்லி அழை..! "என்" என்ற  வார்த்தையையோடு சேர்த்து அழை!  இந்த பிறவியில்  என் உண்மைப் பெயரை  உரிமையோடு சொல்லியழைக்க  உனக்கு மட்டுமே அனுமதி! ஆம்.. உனக்கு மட்டுமே அனுமதி..! அதே போல்  உன் கண்களை திருடி  கவிதைகள் படைக்க  என்னைக் கொஞ்சம் அனுமதி!  உன் அழகைத் திருடி அமுது படைக்க அணுவளவேனும் அனுமதி!  என் கவியேடுகள் முழுமைபெற உன் நினைவுகள் வேண்டும்! என் வாழ்க்கை முழுமைபெற  உன் காதல் வேண்டும்! இனியவளே நான்  மீண்ட...

யாரடி நீ | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்

படம்
யாரடி நீ?  __________________ யாரடி நீ...? ஒரே பார்வையில் உன்னைப்பற்றியே யோசிக்க வைக்கிறாய்... உயிரைக் கயிராக்கி ஊஞ்சல்கட்டி  விளையாடுகிறாய்... காதல் தீயை  பற்றவைத்துவிட்டு கடைக்கண்களால் என்னை கடைந்தெடுக்கிறாய்... யாரடி நீ! • தீவத்திலகையாய் வந்தென்னை காதல் தீவிற்குள் விட்டுச்செல்கிறாய்..  வாச்சாயனாரின் வார்த்தைகளைத் தேடிப் புரட்டச் செய்கிறாய்.. வள்ளுவனின் காமத்துப்பாலுக்கு மட்டும் விளக்கம் கேட்டு அலையச் செய்கிறாய்... யாரடி நீ? • ஒரு சொட்டுப்  புன்னகையை வீசி என் உயிரையே உடைத்துப் போடுகிறாய்... ஒரே ஒரு வார்த்தைக்காக என் வாழ்க்கையையே உன்னிடம் யாசிக்கச் செய்கிறாய்...  விடியலை விரட்டியடித்து என்  நீண்ட கனவுகளுக்குள் எதிர்காலக் கதையளக்கிறாய்.. யாரடி நீ? • என் இதயத்திற்கு இறகுகளைப் படைத்து உன்னைச் சுற்றியே பறக்கச் செய்கிறாய்... என் பகலையும்  இரவையும் சுருக்கி ஒரு கைப்பேசிக்குள் அடைத்துச் செல்கிறாய்... என் இலச்சிய மரத்தை பிடுங்கி வீசிவிட்டு அங்கு காதல்ச் செடியை நட்டுச் செல்கிறாய்... யாரடி நீ? • யாரும் பார்க்காத  இடம்சென்று தனிமையில் அழவைக...

என்ன பயன் | கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்

படம்
உழைப்பவர் தெருவில் கையேந்த  அரசுகள் இருந்தும் என்ன பயன்? ஆமைகள் ஆளும் இந்நாட்டில் அடிமைகள் அழுதும் என்ன பயன்? வருபவன் எல்லாம் களவாணி ஆட்சிகள் மாறி என்ன பயன்? ஊழலே எல்லாம் என்றானால் உதைக்காமல் இருந்தும் என்ன பயன்...?

மேல்முறையீடு | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

படம்
மேல்முறையீடு  __________________ நான்  பலமுறை தோல்வியடைந்திருக்கிறேன்.. அவையெல்லாம் வலிக்கவில்லை எனக்கு.. ஆனால் இந்த  பாழாய்_போன காதல் தோல்வி மட்டும் என்னை பாடாய் படுத்துகிறது பெண்ணே... அதனால் தான் இந்த தோல்வியை எதிர்த்து  நான் மேல்முறையீடு செய்யலாமென நினைக்கிறேன்... தீர்ப்பு  எனக்கு சாதகமாய் அமைய ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்று உன் இதயத்திடம் கேட்டு சொல்லேன்...!!  மாயவரம் இதயராஜா மேலப்பெரும்பள்ளம் 

இப்படி வேண்டும் இந்தியா | கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

படம்
_____________ மாய்ந்திட வேண்டும்  மாந்தர் வறுமை! தேய்ந்திட வேண்டும்  பணவெறிப் பெருமை! ஓய்ந்திட வேண்டும் மதவெறி நீதி! சாய்ந்திட வேண்டும்  மண்ணில் சாதி! • விடிந்திட வேண்டும் ஏழையர் கிழக்கு! அழிந்திட வேண்டும் வன்முறை அழுக்கு! இறந்திட வேண்டும் ஊழல் இலஞ்சம்! இனித்திட வேண்டும் இந்தியர் நெஞ்சம்!  மாயவரம் இதயராஜா மேலப்பெரும்பள்ளம்

சுதந்திரம் | கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

படம்
சுதந்திரம் ________________ ஆட்சி செய்யும் யாவருக்கும் ஊழல் செய்யச் சுதந்திரம்... அதிகாரக் கரங்களுக்கு இலஞ்சம் வாங்கச் சுதந்திரம்..! சாதி மத வெறிபிடித்து சண்டை செய்யச் சுதந்திரம்! வெரட்டி வெரட்டி  ரோட்டில் வைத்து கொலைகள் செய்ய சுதந்திரம்! குழந்தைகளைக் கடத்திச் சென்று கற்பழிக்கச் சுதந்திரம்! தேசத்தை கூறுபோட்டு விற்பதற்கு சுதந்திரம்! கலவியில் கடவுள் தேடும் சாமியார்க்கு சுதந்திரம்! கல்வியை கடைவிரித்து காசு பார்க்கச் சுதந்திரம்! கற்பவர் வேலையின்றி அழுவதற்குச் சுதந்திரம்! காசுமுன் சட்டம் வளைந்து விழுவதற்கு சுதந்திரம்! வாழவே வழியில்லாத வறியவருக்கா  சுதந்திரம்? வரியினை விழுங்கி வாழும் முதலைகளுக்கே சுதந்திரம்! 16/08/2020 மாலை 6:30  மாயவரம் இதயராஜா மேலப்பெரும்பள்ளம்.