முள் | காதல் தோல்வி கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்
________
அன்று
ஊர்கோடி எல்லையில்
உன்னை சந்திக்க ஓடோடி வந்தேன்...
ஆவலோடு ஓடிவந்த என் பாதத்தில்
முள் ஒன்று ஆழ பாய்ந்தது...
பதறிய நீ
அழுது கொண்டே
என் பாதத்தில் பாய்ந்த முள்ளினை
எடுத்து விட்டாய்...
இன்று
அந்த நினைவுகளையெல்லாம்
மறந்து செல்கிறாய்...
சரி பெண்ணே
அன்று
என் பாதத்தில் பாய்ந்த முள்ளினை
நீ எடுத்தாய்..
இன்று
உன்னால் என் இதயத்தில்
பாய்ந்த முள்ளினை
யாரை வைத்து நான் எடுப்பேன்?
என் உயிருக்கு சேதமில்லாமல்
உன் நினைவுகளை மட்டும்
பிரித்தெடுக்க
மரணத்தால் கூட முடியாதே..?
மனிதர்களால் எப்படி முடியும்?
நீ இல்லாமல்
அந்த முள்ளினை எடுத்தால்
என் இதய டயரில்
காற்று பிரிந்து
என்னை கொன்று போடும்..
இந்த முள்
என் இதய டயரில்
இப்படியே தைத்திருக்கட்டும்...
நீ திரும்பி வந்து
அதை எடுத்து விட்டு
பஞ்சர் ஒட்டும் வரை!!!