சுதந்திரம் | கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

சுதந்திரம்
________________

ஆட்சி செய்யும்
யாவருக்கும்
ஊழல் செய்யச் சுதந்திரம்...

அதிகாரக் கரங்களுக்கு
இலஞ்சம் வாங்கச்
சுதந்திரம்..!

சாதி மத
வெறிபிடித்து
சண்டை செய்யச் சுதந்திரம்!

வெரட்டி வெரட்டி 
ரோட்டில் வைத்து
கொலைகள் செய்ய சுதந்திரம்!

குழந்தைகளைக்
கடத்திச் சென்று
கற்பழிக்கச் சுதந்திரம்!

தேசத்தை கூறுபோட்டு
விற்பதற்கு
சுதந்திரம்!

கலவியில் கடவுள் தேடும்
சாமியார்க்கு
சுதந்திரம்!

கல்வியை கடைவிரித்து
காசு பார்க்கச்
சுதந்திரம்!

கற்பவர் வேலையின்றி
அழுவதற்குச்
சுதந்திரம்!

காசுமுன் சட்டம் வளைந்து
விழுவதற்கு
சுதந்திரம்!

வாழவே வழியில்லாத
வறியவருக்கா 
சுதந்திரம்?

வரியினை விழுங்கி வாழும்
முதலைகளுக்கே
சுதந்திரம்!

16/08/2020 மாலை 6:30 

மாயவரம் இதயராஜா
மேலப்பெரும்பள்ளம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்ன பயன் | கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்

யாரடி நீ | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்