இப்படி வேண்டும் இந்தியா | கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்
_____________
மாய்ந்திட வேண்டும்
மாந்தர் வறுமை!
தேய்ந்திட வேண்டும்
பணவெறிப் பெருமை!
ஓய்ந்திட வேண்டும்
மதவெறி நீதி!
சாய்ந்திட வேண்டும்
மண்ணில் சாதி!
•
விடிந்திட வேண்டும்
ஏழையர் கிழக்கு!
அழிந்திட வேண்டும்
வன்முறை அழுக்கு!
இறந்திட வேண்டும்
ஊழல் இலஞ்சம்!
இனித்திட வேண்டும்
இந்தியர் நெஞ்சம்!
மாயவரம் இதயராஜா
மேலப்பெரும்பள்ளம்