என்ன பயன் | கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்
அரசுகள் இருந்தும்
என்ன பயன்?
ஆமைகள் ஆளும் இந்நாட்டில்
அடிமைகள் அழுதும்
என்ன பயன்?
வருபவன் எல்லாம் களவாணி
ஆட்சிகள் மாறி
என்ன பயன்?
ஊழலே எல்லாம் என்றானால்
உதைக்காமல் இருந்தும்
என்ன பயன்...?