காதலித்துப் பார் - கவிதை - மாயவரம் இதயராஜா
காதலித்துப்பார்
•
காதலித்துப்பார் என்றார்
என் ஆசான்
காதலித்துப் பார்த்தேன்..
ம் ..
என்ன இருக்கிறது
இந்த காதலில்
உயிரை
வருடிக்கொடுக்க
உன்னதமான
ஒரே ஒரு
மயிலிறகு இருக்கிறது...
உள்ளங்களை ஒட்டவைக்க
ஒரு சொட்டு
பெவிகுயிக்
இருக்கிறது!
உச்சந்தலைக்கும்
உள்ளங்கால்களுக்கும்
இடையில்
பாய்ந்தோட
கொஞ்சம்
மின்சாரம் இருக்கிறது...
காதலர்களுக்கென்று
உள்ளங்கை அளவில்
ஒரு
உலகம் இருக்கிறது...
அதோடு கூட
சின்னதொரு சொர்க்கம்
இருக்கிறது..
வேறென்ன இருக்கிறது?
சரி
என்ன தந்ததாம்
இந்த காதல்?
வின்னில் பறப்பதற்கு
கண்ணுக்குத் தெரியா ஒரு
விமானம் தந்தது...
இனியவளைச் சுற்றிவர
இரண்டே இரண்டு
இறகு தந்தது..
கண்களால் பேசும்
முறையை
ஓரளவு
கற்றுத்தந்தது...!!
கைப்பேசிக்கு
காவடி எடுக்கச்செய்து
காதல் பேச்சுக்களை
வரம்பெற வைத்தது...
கனவுகளை அதிகப்படுத்தி
காதல் கவிதைகளை
கற்பனைக்குள்
ஊற்றியது..
கலப்படம் இல்லாத
இமயத்துத் தேனை
இதழ்களில் கொஞ்சம்
பருகச்செய்தது...
என் இலச்சியப் பறவைக்கு
கால்கட்டு போட்டு
காதல் காதல் என்று
கூவச் செய்தது..!
மோக மந்திரம்
கற்றுத்தந்து
காமதேவனை
வழிபட வைத்தது..
அதுவே
கண்களில் தொடங்கி
கழுத்துவரை காதலி என்ற
கண்ணியமான
கட்டளையும் தந்தது..
உண்மைதான்
வாழ்க்கையை அழகாக்க
ஒரே ஒரு
காதலியைத் தந்தது!
ஏற்றுக்கொள்கிறேன்..
வேறென்ன
தந்ததிந்த காதல்?
வேறென்ன இருக்கிறது
காதலில்?
18-12-2018 அன்று காலை
எழுதியது.