பிறந்த நாள் வாழ்த்து கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா மயிலாடுதுறை மாவட்டம்.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என் செல்லமே..
__________________________

அன்புள்ள மகனுக்கு
அப்பாவின் கடிதம்!
__________________________

இன்பா என்கிற இனியவனே -என்
குரும்புக்கார முதல் மகனே..
சிறப்பாய் வாழ்ந்துநீ சிகரம் தொட -என்
சீர்மிகுத் தமிழால் வாழ்த்துகிறேன்..

மழலைக் குரலில் செந்தமிழை-என்
மனதில் ஊற்றும் நேரமதில்
வறுமை மறந்து ரசிக்கின்றேன்!-என்
வலியை மறந்து சிரிக்கின்றேன்!

வானம் பார்த்து நடவாதே!- தன்
மானம் காத்து நடந்துவிடு!
சுயநலம் தன்னை போற்றாதே!-உன்
சுற்றம் காத்து வாழ்ந்துவிடு!

அன்பில் மட்டும் வளைந்து கொடு! -உனை
அடைக்கிட முனைந்தால் வாளை எடு!
கல்வி கலைகளில் தேர்ந்துவிடு!- என்
கனவை நிறைவேற்றி வாழ்ந்துவிடு!

நல்லவை அல்லவை அறிந்துவிடு! -அதில்
நல்லதை மட்டும் பழகிவிடு!
நண்பன் தீயவன் என்றறிந்தால்- உன்
நல்லதில் சிலவற்றை பழக்கி விடு!

எட்டுத் திசையும் எதிரிகளா-உன் 
சிரசைச் சிறிதும் சாய்க்காதே!
வீரத் தமிழன் விளைபொருள் நீ!-இதை
கடைசிவரை நீ மறக்காதே!

பேதம் பார்த்தல் பெருங்குற்றம்-அதை
சினத்தில் கூடச் செய்யாதே!
இலச்சியம் நோக்கி ஓடிடு நீ!-சிறு
இடர்கண்டு இடையில் நிறுத்தாதே!

அறிவைப் பெருக்கும் நூல் கற்று -உன்
சிந்தை பரப்பை விரிவாக்கு!
வளமை பொங்கும் எதிர்காலம் -அதை
உனக்கு நீயே உருவாக்கு!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திரம் | கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

என்ன பயன் | கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்

யாரடி நீ | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்