வரம் | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா
வரம்
•
நெடுநாளாய்
தவம் இருக்கிறேன்..
காதலை
வரமாகத் தருவாய் என்று..
நீயோ
கண்ணீரை வரம் தருகிறாய்..
இனியவளே..
உன் பார்வை பட்டுத்தானே
கல்லாய் கிடந்த நான்
கவிஞன் ஆனேன்..?
உன் நினைவுகளை கொட்டித்தானே
என் சிந்தனைப் பாணையில்
கவிதை சமைத்தேன்.. ?
நான் இனிக்க இனிக்க
கவிதைகள் படைக்க
என் கற்பனை ஊற்றில் விழுந்த கொம்புத் தேனே நீதானே காரணம்?
கொம்புத்தேன் நீ இல்லாவிடில்
நான்
கொம்பன் இல்லை கவிதையில்..
கவிக்கொம்பன் என்ற
பெயருக்கு பின்னால் வரும்
என் உண்மைப் பெயரை
சொல்லி அழை..!
"என்" என்ற
வார்த்தையையோடு சேர்த்து அழை!
இந்த பிறவியில்
என் உண்மைப் பெயரை
உரிமையோடு சொல்லியழைக்க
உனக்கு மட்டுமே அனுமதி!
ஆம்..
உனக்கு மட்டுமே அனுமதி..!
அதே போல்
உன் கண்களை திருடி
கவிதைகள் படைக்க
என்னைக் கொஞ்சம் அனுமதி!
உன் அழகைத் திருடி
அமுது படைக்க
அணுவளவேனும் அனுமதி!
என் கவியேடுகள் முழுமைபெற
உன் நினைவுகள் வேண்டும்!
என் வாழ்க்கை முழுமைபெற
உன் காதல் வேண்டும்!
இனியவளே
நான்
மீண்டும் தவமிருக்கிறேன்
உனக்காக..
இனியவளே..
இப்பொழுதாவது
வரம் கொடு..
வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளில்
நான்காம் தேவையை ..!!
04-05-2022
காலை 10 மணிக்கு எழுதியது.