ஆதாம் ஏவாள் காதல்

ஆதாம் ஏவாள் காதல்

காதலைச் சொல்வதற்கே 
ஏனடி
இப்படி தயங்குகிறாய்? 

அந்த ஏதேன் தோட்டத்தில்
நாம் அப்படியா பழகினோம்? 

பழத்தோட்டத்தில்
கொஞ்சி விளையாடியதை 
மறந்து 
இந்த 
பாலைவனத்தில் ஏனடி 
நாட்களை வீனடிக்கிக்கிறாய்? 

கடவுளோடு 
பேசி மகிழ்ந்ததை மறந்து
ஏனடி என்னை 
காற்றோடு 
புலம்ப வைக்கிறாய்... 

அன்று
என் தனிமையை போக்க
என்னில் இருந்து 
உன்னைப் படைத்தளித்து
உனக்கு பெயரிடச்சொன்னார் 
கடவுள்.. 

தாவரங்களுக்கும்
விலங்கினங்களுக்கும்
பெயரிட்ட நான் 
உனக்கும் பெயரிட்டேன்..

இன்று
உன் பெயர் எழில்
அன்று ஏவாள்..

ஏவாள் என்றால்
உயிரினங்களுக்கெல்லாம் 
தாய்!

ஏவாளே

இன்று நீ பட்டுப்புடவையில்
என்னை 
பரிதவிக்க வைக்கலாம்..
அன்று
அத்தி இலைகளில்
ஆடைகள் செய்து
உனக்கு 
அணிவித்து 
மகிழ்ந்தவன் நான்.. 
 

நீ கடித்து தந்ததால் 
சர்ப்பம் சொன்ன கனியை புசித்து 
சபிப்புக்கு உள்ளானவன் நான்...

அன்று 
சர்ப்பத்திடம் ஏமார்ந்தவள் நீ..

பாழாய் போன பாம்பின்
பேச்சைக் கேட்டு 
இப்பிறவியிலுமா 
ஏமாறப்போகிறாய்?

நினைவிருக்கிறதா ஏவாளே 
இப்பழத்தை 
புசிக்க வேண்டாம் என்ற
கடவுளின் 
கட்டளையை மீறியதால் 
நாம்
ஏதேனில் இருந்து விரட்டப்பட்டது?

ஒரு உண்மையைச் சொல்கிறேன்..

இந்த பிறவியிலும்
நாம் 
ஒன்று சேர்ந்து வாழவேண்டும்..

இது கடவுளின் கட்டளை!
 
ஏதேன் தோட்டத்தின் 
கதவுகளைத் திறந்துவிட்டு
கடவுள் காத்திருக்கிறார்...

வா ஏவாளே

இந்த பிறவியிலாவது 
கடவுளின்
கட்டளையை மீறாமல் 
#காதல்_செய்திடுவோம்..!!

15-12-2018 அன்று இரவு எழுதியது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திரம் | கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

என்ன பயன் | கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்

யாரடி நீ | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்