காதல்
•மாயவரம் இதயராஜா
காதல்
________
இரண்டு நிலங்களில் விழும்
ஒரு விதை
#காதல்
இரண்டு விதைகளில்
உருவாகும்
ஒரு விரிட்சம்
#காதல்
•
இரண்டு உயிர்களை
ஒட்ட வைக்கும்
ஒரு சொட்டு பசை..
#காதல்
இரண்டு இதயத்துடிப்பில்
வெளிப்படும்
புதுவித இசை
#காதல்
•
இரண்டு ஒயர்களில்
பாய்ந்தோடும்
ஒரு மின்சாரம்
#காதல்!
இரண்டு உயிர்களில்
பாய்ந்தோடும்
ஒரு தேன் நதி
#காதல்
•
இரண்டு கருவறைகள்
சுமந்திடும்
ஒரு குழந்தை
#காதல்
இரண்டு தேடல்களில் தென்படும்
ஒரு புதையல்
#காதல்
•
இரண்டு தாகங்களை தீர்த்திடும்
ஒரு மழைத்துளி
#காதல்
இரண்டு பசிகளைப் போக்கிடும்
ஒரு பருக்கை
#காதல்
•
இரண்டு கடல்களில் ஏற்படும்
ஒரு சுனாமி
#காதல்
இரண்டு மணிகளில்
ஏற்படும்
ஒரு ஓசை
#காதல்
•
இரண்டு கோயில்களில்
உடைபடும்
ஒரு தேங்காய்
#காதல்
இரண்டு மதங்களுக்கு
பொதுவான
ஒரு மந்திரம்
#காதல்
•
இரண்டு மூளைகளில்
ஏற்படும்
ஒரு பித்து
#காதல்
இரண்டு கடல்களில்
மூழ்கி எடுக்கும்
ஒரு முத்து
#காதல்
•
இரண்டு இதழ்களுக்கு
நடுவில் தோன்றும்
ஒரு முத்தம்
#காதல்
இரண்டு இதயங்களுக்கு
நடுவில் தோன்றும்
ஒரு யுத்தம்
#காதல்
•