ஒரு காதலனின் கடைசி கடுதாசி


 
ஒரு காதலனின் கடைசி கடுதாசி
__________________

மனச கட்டி இழுத்தவ 
மறந்து ஓட பாக்குற.. 
ஆசக்கார மாமன 
உசுர மட்டும் கேக்குற.. 

வாசலில கோலமிட்டு 
என் வரவை தேடினதும்...
வரப்புல நண்டாட்டம்
பாத்துபுட்டு ஓடினதும்...

காதல் சொல்ல வந்துதான்
திக்கி பேசி நின்னதும்...
கச்சிதமா காதல
கண்ணடிச்சி சொன்னதும்..

பகலு போல நெலவுல
கொஞ்சி பேச வந்ததும்...
ஏக சாக பேச்சில 
ஊரு நாக்கு வெந்ததும்...

ஆசையோட பாத்ததும்
அள்ளி அள்ளி அனைச்சதும்... 
பாசத்தோட சிரிச்சதும்
பாவி மனச உரிச்சதும்... 

அண்ட வெட்டும் நேரத்துல
துண்ட போட்டு தாண்டுனதும்...
நாத்து நடும் நேரத்துல
சாமிகிட்ட வேண்டுனதும்...

வாக்கப்பட்டு வாரேன்னு
நெஞ்சோடு சாஞ்சதும்...
ஆறு செத்த ஊராட்டம்
எம்மனசு காஞ்சதும்...

சத்தமில்லா காட்டுல
சம்மதத்த தந்ததும்...
முத்தமிட்ட சூட்டுல
சோறு போல வெந்ததும்...

பொண்ணு பாக்க வந்ததா
அழுது அழுது சொன்னதும்...
பொட்ட மாடு கணக்குல நான்
முட்டி மோதி நின்னதும்...

மறந்து போனா மறக்குமா? 
இறந்த பின்னும் இறக்குமா?
மறந்து வாழ  ஊருல
மருந்து ஏதும் கிடைக்குமா...

ஈச்சங் காட்டுக்குள்ளத்தான்
காதல் ஊடு கட்டினோம்..
இடைஞ்சலுன்னு ஒன்னு ரெண்டு
மறத்த கூட வெட்டினோம்...

வெட்டி போட்ட மரமெல்லாம்
காஞ்சி போயி கெடக்கடி!-(எனக்கு)
மாலை போட வந்தின்னா
மறக்காம சொல்லடி...!!

•மாயவரம் இதயராஜா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திரம் | கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

என்ன பயன் | கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்

யாரடி நீ | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்